-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

சனி, 27 செப்டம்பர், 2008

நாகரிக நங்கை!

குட்டைப்பா வாடை கொழுத்த தொடைகாட்ட
வட்டணிந்த மார்பின் வளங்காட்டி -வட்டுடைகீழ்
ஆதார மில்லா அரும்பாகம் காட்டுமவள்
சேதார மில்லாச் சிலை!

குதிகால் அணியால் கொடியிடை ஆடும்
இதழோடு லிப்ஸ்டிக் எழிலாம் -சுதிசேர்
நடையில் நளின நயமிருக்கும் இல்லா
இடைபோல் அணிவாள் உடை!

பாவாடை தாவணிகள் பார்ப்ப(து) அரிதாச்சு;
பூவாட்டம் சேலைகளும் போயாச்சு -பாவையர்க்கு
சல்வார்க் கமீஸ்;சுடி தார்;மிடி ஜீன்ஸ்;மினிஸ்கர்ட்(டு)
எல்லாந்தான் இன்றைய டேஸ்ட்!

அகரம்.அமுதா

திங்கள், 22 செப்டம்பர், 2008

?

குறுக்கி எழுதக் குறளிருக்க வீணாய்
கிறுக்குவதும் ஏனாம்ஹைக் கூ?

அகரம்.அமுதா!

வியாழன், 18 செப்டம்பர், 2008

உழவு!

வீசமஞ்சு நாத்துநட்டு வேண்டாக் களையெடுத்துக்
காசை உரமாக் கழனியிட்டுப் -பாசனநீர்
தேக்கி விளைந்ததைச் சேர்த்தடிச்சுப் பாத்தாக்கா
சாக்கில் பதரேமிச் சம்!

அகரம்.அமுதா

ஞாயிறு, 14 செப்டம்பர், 2008

மப்பு!

டண்டக்கா காபரே டான்ஸ்ஹோட்டேல் போனாக்கா
குண்டக்கா மண்டக்கா கூத்தாச்சே! -மண்டக்காஞ்
சிப்போக மூணுரௌண்(டு) உட்போக மோகம்முத்
திப்போகப் பிஞ்சிடுச்சென் ஜிப்பு!

அகரம்.அமுதா

செவ்வாய், 9 செப்டம்பர், 2008

நட்பு-2!

தூய்மை இலாவிடத்து சுந்தரம் நீங்கிவிடும்;
வாய்மை இலாவிடத்து மாண்புகள்; -ஆய்ந்துவிடின்
பாநயம் இல்லையெனில் பண்ணெழில் நீங்கிவிடும்;
நாநயம் இல்லையெனில் நட்பு!

அகரம்.அமுதா

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

சாதனை!

தண்ணிக்குப் பஞ்சம் தமிழ் நாட்டில் இல்லையடா!
என்றைக்கோ இந்நிலை மாறிடிச்சே! ‍-இன்றைக்கு
வீதிக்கு வீதிஒயின் ஷாப்பை அரசியற்றி
சாதிச்சிக் காட்டிடுச்சே தான்!

அகரம்.அமுதா

திங்கள், 1 செப்டம்பர், 2008

கலிகாலம்!

ஈரெட் டகவையும் ஆகாத போதும்வெண்
சீரெட்டு தேடும் சிறுசெல்லாம் -பீரை
ஒளித்துக் குடிப்பதுடன் சைட்டும் அடிப்பார்
கலிகாலம் ஈதென்றே காண்!

அகரம்.அமுதா