-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

செவ்வாய், 30 டிசம்பர், 2008

தெருக்குறள்! கல்விவிலை பேசல்!

கற்க கசடறக் கற்பவைக் கற்றபின்
விற்க அதற்குத் தக!

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டை
பண்ணென்ப விற்றுப் பணம்!

கண்ணுடையர் கற்றகல்வி விற்றோர் முகத்திரண்டுப்
புண்ணுடையர் விற்கா தவர்!

உவப்ப விலைபேசி உள்ளது கொள்ளல்
அனைத்தேயாம் கல்வித் தொழில்!

உடையார் இலாரைஏ மாற்றல்போல் விற்பார்
கடையரே விற்கா தவர்!

தொட்டனைத் தூறுமணற் கேணிகல்வி விற்பார்க்கு
விற்றனைத் தூறும் பொருள்!

ஓதுவித்தல் மாடாமால் காசாமால் என்னொருவன்
சாந்துணையும் விற்காத வாறு!

ஒருமைக்கண் கல்விவிற்ற கா(சு)அவர் தன்கால்
வழிக்கெலாம் ஏமாப் புடைத்து!

தாமின் புறுவ(து) உலகின் புறவிற்றுக்
காமுறுவர் விற்றறிந் தார்!

கேடெனினும் கல்வி விலைசெய்க; செய்யார்க்கு
மாடுண்டோ மற்றை வழி?

தெருவள்ளுவன் (அகரம்.அமுதா)

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

கணவனும், மனைவியும்!

கணவன்:-
காலை தொடங்கிக் கடுமையா வேர்வைசிந்தி
மாலையான பின்னே மதிமயங்க –வேலைவிட்டுப்
பொண்டாட் டியொனக்குப் பூவாங்கி வந்தாக்கா
என்னாடி போய்ஒதுங்கு றே?

மனைவி:-
நேத்தி இராவுல நித்திரைநான் கொள்ளயில
ஆத்தாசொன் னான்னு அடிச்சிப்புட்(டு) -ஆத்திரம்
தீர்ந்ததும் இன்னிக்குத் தேடிவந்துக் கொஞ்சினாலும்
நேர்ந்ததை நான்மறப்பே னா?

அகரம்.அமுதா

சனி, 6 டிசம்பர், 2008

கணவனும், மனைவியும்!

கணவன்:-
காதோடக் கம்மல் கழட்டிப்போய் விற்றபணம்
சூதாட்டத் தில்வெச்சி தோற்றுவிட்டேன் -தோதாக
கட்டிய தாலி கழட்டிநீ தந்தாக்கா
விட்டதை மீட்டிடு வேன்!

மனைவி:-
வேலைக்குப் போகாமல் வெத்துவேட்டாய்ச் சுற்றிவந்து
தாலிக் கொடியையா 'தா'ங்கற? -மாலையானால்
வீட்டுப் பொருளையெல்லாம் விற்றுக் குடித்துவிட்டு
சீட்டாடப் போறியா? சீ!

அகரம்.அமுதா