-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

திங்கள், 28 ஏப்ரல், 2008

பஸ்ஸில்...!

கண்டெக்டர்:-
இந்தாப்பா! பஸ்ஸிற்குள் ஏறுமுன்னே சொன்னேன்ல!
வந்துட்டான் என்உயிரை வாங்கண்ணே! -அஞ்சுரூபாய்
சீட்டுக்குச் சில்லரையை நீட்டாமல் நூறுரூபாய்
நோட்டெடுத்து நீட்டுறியா நீ?

பயணி:-
கூட்டத்தில் முந்திவந்து குந்த இடம்பிடிக்கும்
ஆட்டத்தில் தோற்றுநான் அங்கநின்னா -சேட்டையைக்
காட்டுற; அங்கஇங்க ஓட்டுற; நோட்டுதந்தால்
நீட்டுற; சில்லரைக்கே சீட்டு?

அகரம்.அமுதா

வேலைக்குப் போகலாம் வா!

பெற்றோர் பிரிந்து பெருஞ்செல்வம் சேர்த்திடலாம்
உற்றவளை வீட்டி(ல்)விட்டு வாதம்பி!- குற்றமில்லை
மேலைநன் நாடிருக்கு வேண்டு(ம்)பணம் சேர்த்துவர
வேலைக்குப் போகலாம் வா!

கொஞ்சமேனும் வீடுகட்டி கொண்டவளைப் பெற்றோரை
நெஞ்சு குளிர்ந்துவிடச் செய்திடலாம்- அஞ்சு
வருசம் அயல்நாட்டில் வேர்வைதனைச் சிந்தி
வருந்தி உழைத்திடலாம் வா!

தங்கைக் கலியாணம்; தாய்க்கு மருத்துவத்தோ
டஞ்சு வயதான தம்பிகற்க- தந்தையால்
உற்றகடன் தீர்க்கக் குடியிருக்கும் வீடுநிலம்
விற்றேனும் வானூர்தி ஏறு!

பிறப்பெடுத்த ஊரில்;பேர் பெற்றவுன் நாட்டில்
திறமைதனைக் காட்டல் சிறப்பா? –மறவாமல்
இட்டமுடன் மேல்நாட்டிற் கேகியே உன்திறத்தை
நட்டமென்ன காட்டிவிடு நன்கு!

அகரம். அமுதா

சனி, 26 ஏப்ரல், 2008

டீக்கடையில்...!

கஸ்டமர்:-
டிக்யாஷன் இல்லாமல் 'டீ'யொன்னு போடப்பா!
பக்காவாப் போட்டால் பணந்தருவேன்! -அக்கவுண்டில்
கேட்கிறதாய் எண்ணிக்கிட்டுக் கண்டபடி போட்டாக்கா
சாக்கடைக்குப் போய்டுஞ் சரி!

டீக்கடைக்காரன்:-
டீக்கடை பெஞ்சில்உன் டிக்கியைப் பார்க்பண்ணி
பாக்கிவெச்சி பால்டீயாக் கேட்குறே? -போக்கிடம்
வேறின்றி பேப்பரில் வைத்தகண் வாங்காமல்
ஆரிடம்ஆர் டர்போடு றே?

அகரம்.அமுதா

தேர்தலில்!


கொத்து பரோட்டா குடிப்பதற்குச் சாராயம்
பத்தா யிரம்பணம் ரொக்கமாத்தா –மத்தபடி
எஞ்சாதி ஓட்டுகள் எண்ணூறு தேருமிதை
செஞ்சாக்கா ஓட்டுண் டுனக்கு!

எஞ்சாதிக் காரனாநீ? எங்கிட்டக் கேட்கணுமா!
எங்குடும்ப ஓட்டுனக்குத் தானப்பா –முன்பு
எதிர்கட்சிக் காரன் எழுநூறு தந்தான்
எதற்கும்நீ எண்ணூராய்த் தா!

அஞ்சு வருசமென்ன? ஐநூறும் ஆளப்பா!
கெஞ்சியென் கால்பிடித்துக் கேட்டதில் -நெஞ்சு
நெறஞ்சாச்சு; முன்நாளில் நீசெய்த ஊழல்
மறந்தாச்(சு) உனக்கேயென் வாக்கு!

அகரம்.அமுதா

சனி, 19 ஏப்ரல், 2008

மதிப்பு!

கொம்பு முளைச்சிடுமா பட்டம் படிச்சிட்டா?
ஜம்முன்னு சுத்திடுவான் ஜாலியா! -கம்முன்னு
தந்தைக் குருப்படியாய் ஹெல்ப்பேதும் செய்யாமல்
சந்தையி லேஅடிப்பான் சைட்டு!

எம்.ஏ படிச்சதற்(கு) ஏற்றவேலை வேண்டுமென்று
சும்மாத் திரிந்தால் சுகப்படுமா? -பம்மாத்துக்
காட்டாமல் கைக்குக் கிடைத்தவேலை பார்த்தால்தான்
வீட்டில் கிடைக்கும் மதிப்பு!

அகரம்.அமுதா

புதன், 16 ஏப்ரல், 2008

பம்படியில்!

நேர்பிடித்து ‘கீவில்’ நிதமுமே நிண்ணாலும்
நீர்வருமோ கார்ப்பரே ஷன்குழாயில்? -பார்த்தாக்கா
காத்துவரும்; காத்தோட சத்த(ம்)வரும் நீர்க்குமிழி
பூத்துவரும் பாத்துட்டு போ!

வாராத நீர்க்கு வரிசையிலே நிண்ணுப்பா(ள்);
தேராத வார்த்தைகளால் திட்டிப்பா(ள்); -நேராய்
அடிச்சிப்பா(ள்); மண்டை உடைச்சிப்பா(ள்); சிண்டைப்
பிடிச்சிப்பா(ள்) கொத்தாகப் பிய்த்து!

தண்ணி பிடிக்குமிடம் தண்ணி அடிக்குமிடம்
ரெண்டிலயும் சண்டைக்குப் பஞ்சமில்லே! -தண்ணி
அடிச்சாத்தான் ஆண்சண்டை போடுறான்; பொண்ணோ
பிடிக்கவே போடுறாசண் டை!

பூவடியாள் தண்ணீர்க்காய் போய்வரிசை யில்நின்று
தேவடியாள் ஆனாள் தெருக்குழாயில்! -பாவமடா!
மாதவி என்பாரே கண்ணகியை; அங்குநின்றால்
சீதைக்கும் இந்நிலைதான் சீ!

அகரம்.அமுதா

கல்வி!




முதுகில்புக்ஸ் மூட்டை சுமந்துநான் போக
பொதிகழுதை கண்டு புலம்பும் -அதுக்கிருக்கும்
நல்ல குணங்கூட நாலுபேர்க் கில்லையிக்
கல்வியென் மேலெரிந்த கல்!

எழுதிகை சோர்ந்து விரல்தேய்ந்து ரேகை
அழிந்துகண் பார்வை குறைந்துப் -பழுதாகிக்
கண்ணாடி போட்டபின்னும் ஹோம்வொர்க்செய் என்கறீங்க!
என்னாங்க டீச்சர் இது!

விடிந்தால் டியூஷன்விட் டால்பள்ளிக் கூடம்
முடிந்து விளையாடப் போனா –படிங்கிற
வார்த்தையைத்தான் பாட்டிவரை வாய்நிறையக் கற்றிருக்காள்
ஆர்கிட்டச் சொல்லி அழ!

ஹோம்வொர்க்கைச் செய்து முடித்தவுடன் ஓடிப்போய்
கேம்ஆட டி.விரிமோட் கேட்டாக்கா –வீம்போட
சீரியல் பார்க்கணுண்ணு சீறுகிறாள் என்மம்மி
போரடிக்குதே வாழ்க்கை போ!

அகரம்.அமுதா