-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

புதன், 24 ஜூன், 2009

!

ஆற்றோரம் நாணல் அடியில் அமர்ந்தொருவன்
நேற்றுண்ட தைப்போக்கி நீங்கிச்சென் -றூற்றூறும்
நீரினிலே காலலம்பி நீங்கினான் நேரிழையும்
நீரிறைத்து நீங்கினால் நின்று.

அகரம் அமுதா

வியாழன், 18 ஜூன், 2009

புகை!

நகரம் முதல நரகம் உறிஞ்சும்
புகையின் முதலேவாய்ப் புற்று.

புற்றதனால் வீழும் புகழுடல் பற்றறுத்து
முற்றா எழாஅர் எனில்.

புற்றதால் வாயில் புழுநெலியும் பற்றதனால்
வைக்காதே பாழ்சுருளின் மேல்.

அகரம் அமுதா

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

ஏமாற்றம்!

வித்தெல்லாம் வித்தும்ஏ சண்டுக்குப் பத்தாம
மத்ததுக்குக் காட்டைவீட்டை வச்சுவந்தேன் -அத்தமகள்
கைநழுவிப் போனதுபோல் காசுக்காய் வேர்வைசிந்தி
மெய்யிளைச்சிப் போனதேமிச் சம்!


அகரம்.அமுதா

திங்கள், 9 பிப்ரவரி, 2009

மூட நம்பிக்கை!


ராந்தல் அனைச்சிநேத்தி ராவில் உறங்கயில
ஆந்தை அலறி அடங்கியதில் -சாந்திபோய்
நொந்திடுச்சே நோகாத நெஞ்சமி(து) அந்தியில
தந்திவந்து சேர்ந்திடுச்சே தான்!


அகரம்.அமுதா

செவ்வாய், 30 டிசம்பர், 2008

தெருக்குறள்! கல்விவிலை பேசல்!

கற்க கசடறக் கற்பவைக் கற்றபின்
விற்க அதற்குத் தக!

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டை
பண்ணென்ப விற்றுப் பணம்!

கண்ணுடையர் கற்றகல்வி விற்றோர் முகத்திரண்டுப்
புண்ணுடையர் விற்கா தவர்!

உவப்ப விலைபேசி உள்ளது கொள்ளல்
அனைத்தேயாம் கல்வித் தொழில்!

உடையார் இலாரைஏ மாற்றல்போல் விற்பார்
கடையரே விற்கா தவர்!

தொட்டனைத் தூறுமணற் கேணிகல்வி விற்பார்க்கு
விற்றனைத் தூறும் பொருள்!

ஓதுவித்தல் மாடாமால் காசாமால் என்னொருவன்
சாந்துணையும் விற்காத வாறு!

ஒருமைக்கண் கல்விவிற்ற கா(சு)அவர் தன்கால்
வழிக்கெலாம் ஏமாப் புடைத்து!

தாமின் புறுவ(து) உலகின் புறவிற்றுக்
காமுறுவர் விற்றறிந் தார்!

கேடெனினும் கல்வி விலைசெய்க; செய்யார்க்கு
மாடுண்டோ மற்றை வழி?

தெருவள்ளுவன் (அகரம்.அமுதா)

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

கணவனும், மனைவியும்!

கணவன்:-
காலை தொடங்கிக் கடுமையா வேர்வைசிந்தி
மாலையான பின்னே மதிமயங்க –வேலைவிட்டுப்
பொண்டாட் டியொனக்குப் பூவாங்கி வந்தாக்கா
என்னாடி போய்ஒதுங்கு றே?

மனைவி:-
நேத்தி இராவுல நித்திரைநான் கொள்ளயில
ஆத்தாசொன் னான்னு அடிச்சிப்புட்(டு) -ஆத்திரம்
தீர்ந்ததும் இன்னிக்குத் தேடிவந்துக் கொஞ்சினாலும்
நேர்ந்ததை நான்மறப்பே னா?

அகரம்.அமுதா

சனி, 6 டிசம்பர், 2008

கணவனும், மனைவியும்!

கணவன்:-
காதோடக் கம்மல் கழட்டிப்போய் விற்றபணம்
சூதாட்டத் தில்வெச்சி தோற்றுவிட்டேன் -தோதாக
கட்டிய தாலி கழட்டிநீ தந்தாக்கா
விட்டதை மீட்டிடு வேன்!

மனைவி:-
வேலைக்குப் போகாமல் வெத்துவேட்டாய்ச் சுற்றிவந்து
தாலிக் கொடியையா 'தா'ங்கற? -மாலையானால்
வீட்டுப் பொருளையெல்லாம் விற்றுக் குடித்துவிட்டு
சீட்டாடப் போறியா? சீ!

அகரம்.அமுதா

ஞாயிறு, 12 அக்டோபர், 2008

செவுல்பிஞ்சிடும்!

எண்ணனுக்கும் எக்காக்கும் என்றனுக்குங் கண்ணாளம்
பண்ணலேன்னு சொன்னாப் பரிகசிச்சி -முன்னஎங்க
ஆத்தாக்கும் அப்பனுக்கும் ஆச்சான்றே? ஓங்கியொன்னு
போட்டா செவுல்பிஞ்சி டும்!

அகரம்.அமுதா

செவ்வாய், 7 அக்டோபர், 2008

தெருவில் ஒருவன்!

தெருவில் ஒருவன்:-

பந்தாவாப் பையில பத்துரூபா வச்சபடி
வந்தாலும் வந்தேன் வழிமறிச்சிக் -கொண்டாந்தப்
பத்தில் சிகரெட்டும் பான்பராக்கும் வாங்குன்னு
நிக்கிறான்என் னோட ஃபிரண்டு!

அகரம்.அமுதா

வெள்ளி, 3 அக்டோபர், 2008

சிலை!

(தமிழக அரசு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு உருவசிலை அமைத்தபோது!)

ஒத்தையடிப் பாதை ஒதுக்குப் புறம்ஓடை
நித்தமும் ஒன்றைநாடி நான்ஒதுங்க -மத்தபடி
காக்கை கழிக்கக் கழிப்பறைகள் கட்டிவிட்டுப்
பார்க்கிற தேஅரசு பார்!

அகரம்.அமுதா