
சிரமில்லை சின்ன செவியுண்டு; கேளாய்!
கரமில்லை காட்டிக் கொடுக்க –விரல்களுண்டு;
கண்ணில்லை காண்பதற்கே கண்ணாடி போட்டிருக்கும்
என்னருமை கைக்கடிகா ரம்!

மாசிலா மாமுடிக்கு மாமுனிவன் ஈந்ததை
மாசிரத்தான் பெற்றான் மதிபெற்று –மாசென்றே
மாசிகரம் போனான் மயிலவன் இத்தனைக்கும்
மாங்கனியே காரண மாம்!
தீண்டுமைதீண் டாமை இலாநாட்டில் வாழ்வார்க்கு
யாண்டும் இழிதல் இல!
அகரம் அமுதா