-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

வெள்ளி, 21 மே, 2010

மாங்கனி!


மாசிலா மாமுடிக்கு மாமுனிவன் ஈந்ததை
மாசிரத்தான் பெற்றான் மதிபெற்று –மாசென்றே
மாசிகரம் போனான் மயிலவன் இத்தனைக்கும்
மாங்கனியே காரண மாம்!

5 கருத்துகள்:

RVR சொன்னது…

Find your blog impressive your writing with creative thinking is much appreciated--Old man from Houston RVR

அகரம் அமுதன் சொன்னது…

நன்றிகள் நண்பரே

ramanujam சொன்னது…

மாங்கனி
---------
jram
வெண்பாவில் புலியாவீர் நீங்கள-நல்
விளக்கமுற இலக்கணம உங்கள
தண்பாவில் தந்தீராம் நன்றே-நான
தருவதும் வணக்கமாம் ஒன்றே

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24

Sundararaj Thayalan சொன்னது…

மாங்காய் கனியாகி மாவிலைக்குப் போவதுபோல்
தேங்காய் கனியாகித் தேர்ந்தநல் எண்ணைபோல்
நாங்கள் மகிழ்வுறவே நல்லதோர் வெண்பாவை
நீங்கள் தருகின்றீர் நேர்ந்து
---- சுந்தரராஜ் தயாளன்

அகரம் அமுதன் சொன்னது…

வாழ்த்துகள் தயாளன். வெண்பா அருமை