-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

வியாழன், 19 ஜூன், 2008

முட்டைக்குள் யானை


இந்த‌ ப‌ட‌த்தைப் பாருங்க! இது 'ஸைல‌ண்ட் ஜோக்"ல‌ ஒரு வ‌கை. ஒரு சேவ‌ல் பெட்டைக்கோழியோட‌ (அதாவ‌து த‌ன் ம‌னைவியோட‌) க‌ழுத்தைப் பிடிச்சு ஆத்திர‌மா நெரிக்குது! ஏனாம்? ப‌க்க‌த்துலஇ கீழே பாருங்கஇ ஒரு முட்டைக்குள்ளேயிருந்து யானைக்குட்டி ஒண்ணு வெளியே வ‌ருது!

சேவல் தன் பெட்டையின் கழுத்தை நெறிக்கும்போது என்ன சொல்லி நெரிச்சிருக்கும்?
அதுக்கு பெட்டை என்ன பதில் சொல்லியிருக்கும்?

சேவல்:-

இட்டமுட் டையில் இருந்தானை வந்தபின்னும்
முட்டாளா இன்னமும்நான் உன்னைநம்ப? -கட்டியநான்
குத்துக்கல் போலிருக்கக் கூத்தடிக்க மத்தவனை
வெச்சிப் பியாசொல் விரைந்து!

பெட்டை:-

பெத்தபுள்ள சத்தியமா கட்டிய உம்மைவிட்டு
மத்தவனை ஏறெடுத்தும் பார்த்ததில்ல -முட்டைக்குள்
குட்டியானை வந்தகதை யானறியேன்; சந்தேகப்
பட்டெனைகை விட்டுடாதீங் க!

அகரம்.அமுதா

வியாழன், 12 ஜூன், 2008

காய்கறிகள்! பறவைகள்! மரங்கள்!

காய்கறிகள்!
வெங்காயம் தக்காளி வெள்ளரி பீக்கம்ப
ரங்கி புடலைவெண்டி அத்திமு -ருங்கைவாழை
கொத்தவரை கோசு குடைமிளகு பூசணி
கத்தரி பீன்ஸ்பாகற் காய்!

பறவைகள்!
மரங்கொத்தி வாத்துமைனா வெளவால் மயில்சக்
கரவாகம் கௌதாரி காடை -பருந்துநாரை
அன்னம் குயில்கோழி ஆந்தை புறாகிளி
அன்றில் கழுகுகா கம்!

மரங்கள்!
தென்னை விளாமுருங்கை தேக்கு பலாமூங்கில்
புன்னை அகில்நெல்லி பூவரசு -வன்னிகொன்றை
ஆலரசு பாக்கிலந்தை ஆத்தி கமுகுகரு
வேலம்மா வாழைபனை வேம்பு!

அகரம்.அமுதா

திங்கள், 9 ஜூன், 2008

ஸ்ரேயாகொல்?

ஸ்ரேயாகொல் ஐஸ்வர்யா கொல்லோஆட் டோகிராஃப்
ஸ்நேஹாகொல் லைக்குமென் ஹார்ட்!

இருலுக் கிவளின்கண் உள்ள தொருலுக்கு
சீக்லுக்கொன் றோபார் மசி!

ஐஸினோ டைஸினை லுக்கொக்கின் மௌத்டாக்கிங்
யூஸென்ப தில்லை யுணர்!

அகரம்.அமுதா

செவ்வாய், 3 ஜூன், 2008

சிந்தியல்!

உயிர்பன்னி ரெண்டு பதின்னெட்டு மெய்யாம்;
உயிர்மெயிரு நூற்று பதினா(று) -உயர்தமிழில்
ஆய்தமொன் றென்றே அறி!

எபிசிடிஇ எஃஜிஹெச் ஐஜெகெஎல் எம்என்
ஒபிகியு ஆரெஸ் டியுவி –டபிள்யுஎக்ஸ்
ஒய்யிசட்டாம் இங்கிலிஷ்லெட் டர்ஸ்!

‘எஇஐஒயு’ ஐந்துமாங்கி லத்தின் உயிராம்;
‘அஇஉஎஒ’ என்னுமிவை ஐந்தும் -தமிழின்
உயிர்க்குறில் என்றே உணர்!


அகரம்.அமுதா