-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

வியாழன், 12 ஜூன், 2008

காய்கறிகள்! பறவைகள்! மரங்கள்!

காய்கறிகள்!
வெங்காயம் தக்காளி வெள்ளரி பீக்கம்ப
ரங்கி புடலைவெண்டி அத்திமு -ருங்கைவாழை
கொத்தவரை கோசு குடைமிளகு பூசணி
கத்தரி பீன்ஸ்பாகற் காய்!

பறவைகள்!
மரங்கொத்தி வாத்துமைனா வெளவால் மயில்சக்
கரவாகம் கௌதாரி காடை -பருந்துநாரை
அன்னம் குயில்கோழி ஆந்தை புறாகிளி
அன்றில் கழுகுகா கம்!

மரங்கள்!
தென்னை விளாமுருங்கை தேக்கு பலாமூங்கில்
புன்னை அகில்நெல்லி பூவரசு -வன்னிகொன்றை
ஆலரசு பாக்கிலந்தை ஆத்தி கமுகுகரு
வேலம்மா வாழைபனை வேம்பு!

அகரம்.அமுதா

2 கருத்துகள்:

sury சொன்னது…

// வெங்காயம் தக்காளி வெள்ளரி பீக்கம்ப
ரங்கி புடலைவெண்டி அத்திமு -ருங்கைவாழை
கொத்தவரை கோசு குடைமிளகு பூசணி
கத்தரி பீன்ஸ்பாகற் காய்!//

மதிய உணவு மெனுவா ?

வெள்ளரிக்காய் பச்சடி.
கோசு, பீன்சு பொறியல்,
பாகற்காய் பிட்லை
புடலை, பீர்க்கம்பு கூட்டு.
வெங்காயம், முருங்கை,கத்தரி சாம்பார்
தக்காளி ரசம்
வாழைக்காய் சிப்ஸ்
பூசணி மோர்க்குழம்பு
வறுத்த குடைமிளகு. பாயசம், அப்பளம், வடை, தயிர், எல்லாம்.

அம்மாடி ! சாப்பாடு ஜோர் ஜோர் !!

சுப்பு ரத்தினத் தாத்தா.
தஞ்சை.

http://vazhvueri.blogspot.com

அகரம்.அமுதா சொன்னது…

மிக்க நன்றி அய்யா அவர்களே!