கற்க கசடறக் கற்பவைக் கற்றபின்
விற்க அதற்குத் தக!
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டை
பண்ணென்ப விற்றுப் பணம்!
கண்ணுடையர் கற்றகல்வி விற்றோர் முகத்திரண்டுப்
புண்ணுடையர் விற்கா தவர்!
உவப்ப விலைபேசி உள்ளது கொள்ளல்
அனைத்தேயாம் கல்வித் தொழில்!
உடையார் இலாரைஏ மாற்றல்போல் விற்பார்
கடையரே விற்கா தவர்!
தொட்டனைத் தூறுமணற் கேணிகல்வி விற்பார்க்கு
விற்றனைத் தூறும் பொருள்!
ஓதுவித்தல் மாடாமால் காசாமால் என்னொருவன்
சாந்துணையும் விற்காத வாறு!
ஒருமைக்கண் கல்விவிற்ற கா(சு)அவர் தன்கால்
வழிக்கெலாம் ஏமாப் புடைத்து!
தாமின் புறுவ(து) உலகின் புறவிற்றுக்
காமுறுவர் விற்றறிந் தார்!
கேடெனினும் கல்வி விலைசெய்க; செய்யார்க்கு
மாடுண்டோ மற்றை வழி?
தெருவள்ளுவன் (அகரம்.அமுதா)
-
பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி
பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான்
இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே
தம்மாத்துண் டேகணினி யில்!
செவ்வாய், 30 டிசம்பர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 கருத்துகள்:
ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.
ஐயகோ! அய்யன் திருவள்ளுவரைத் தெருவுக்குக் கொண்டு வந்து விட்டீரே!
அப்படியாவது பிரபலமாகட்டும் என்றா?
என்ன செய்வது நண்பரே! ஐயன் வள்ளுவன் குறள்களை இன்றைய கல்வி நிறுவனங்கள் தவறாகப் புரிந்து கொண்டனவோ என்கிற ஐயம் எனக்கெழுந்த கரணியத்தால் திருக்குறளைச் சற்றே மாற்றித் தெருக்குறளாக்கினேன். அப்படியாவது தமிழனுக்கும் தமிழ் ஆட்சியாளர்களுக்கும் சொரணை வந்தால் மகிழ்வேன்.
நவீன திருவள்ளுவருக்கு வாழ்த்துக்கள்
நவீன திருவள்ளுவருக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றிகள் முருக.கவி அவர்களே!
கருத்துரையிடுக