
இந்த படத்தைப் பாருங்க! இது 'ஸைலண்ட் ஜோக்"ல ஒரு வகை. ஒரு சேவல் பெட்டைக்கோழியோட (அதாவது தன் மனைவியோட) கழுத்தைப் பிடிச்சு ஆத்திரமா நெரிக்குது! ஏனாம்? பக்கத்துலஇ கீழே பாருங்கஇ ஒரு முட்டைக்குள்ளேயிருந்து யானைக்குட்டி ஒண்ணு வெளியே வருது!
சேவல் தன் பெட்டையின் கழுத்தை நெறிக்கும்போது என்ன சொல்லி நெரிச்சிருக்கும்?
அதுக்கு பெட்டை என்ன பதில் சொல்லியிருக்கும்?
சேவல்:-
இட்டமுட் டையில் இருந்தானை வந்தபின்னும்
முட்டாளா இன்னமும்நான் உன்னைநம்ப? -கட்டியநான்
குத்துக்கல் போலிருக்கக் கூத்தடிக்க மத்தவனை
வெச்சிப் பியாசொல் விரைந்து!
பெட்டை:-
பெத்தபுள்ள சத்தியமா கட்டிய உம்மைவிட்டு
மத்தவனை ஏறெடுத்தும் பார்த்ததில்ல -முட்டைக்குள்
குட்டியானை வந்தகதை யானறியேன்; சந்தேகப்
பட்டெனைகை விட்டுடாதீங் க!
அகரம்.அமுதா