-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

வியாழன், 19 ஜூன், 2008

முட்டைக்குள் யானை


இந்த‌ ப‌ட‌த்தைப் பாருங்க! இது 'ஸைல‌ண்ட் ஜோக்"ல‌ ஒரு வ‌கை. ஒரு சேவ‌ல் பெட்டைக்கோழியோட‌ (அதாவ‌து த‌ன் ம‌னைவியோட‌) க‌ழுத்தைப் பிடிச்சு ஆத்திர‌மா நெரிக்குது! ஏனாம்? ப‌க்க‌த்துலஇ கீழே பாருங்கஇ ஒரு முட்டைக்குள்ளேயிருந்து யானைக்குட்டி ஒண்ணு வெளியே வ‌ருது!

சேவல் தன் பெட்டையின் கழுத்தை நெறிக்கும்போது என்ன சொல்லி நெரிச்சிருக்கும்?
அதுக்கு பெட்டை என்ன பதில் சொல்லியிருக்கும்?

சேவல்:-

இட்டமுட் டையில் இருந்தானை வந்தபின்னும்
முட்டாளா இன்னமும்நான் உன்னைநம்ப? -கட்டியநான்
குத்துக்கல் போலிருக்கக் கூத்தடிக்க மத்தவனை
வெச்சிப் பியாசொல் விரைந்து!

பெட்டை:-

பெத்தபுள்ள சத்தியமா கட்டிய உம்மைவிட்டு
மத்தவனை ஏறெடுத்தும் பார்த்ததில்ல -முட்டைக்குள்
குட்டியானை வந்தகதை யானறியேன்; சந்தேகப்
பட்டெனைகை விட்டுடாதீங் க!

அகரம்.அமுதா

6 கருத்துகள்:

ஜி சொன்னது…

:))) enga paathaalum muzusum venbaavaa irukuthu :))

அகரம் அமுதா சொன்னது…

காரணமில்லாமலா? தமிழ் இலக்கிய வடிவங்களிலேயே நான் வெண்பாவைத்தான் அதிகம் காதலிக்கிறேன். அதன் வேளிப்பாடாகத்தான் என் அனைத்துத் தளங்களிலும் வெண்பா மயமாயுள்ளது.

கருணாகார்த்திகேயன் சொன்னது…

பள்ளிகூடத்துல தமிழ் 1 & தமிழ் 2
பாடத்துல தமிழ் 1 தான் எனக்கு தெரியும்...
இந்த வெண்ப்பா பத்தி எல்லாம் நமக்கு தெரியாது.. ஆனா... நீங்க எழுதுன விதம்.. ரொம்ப அருமை...

அன்புடன்
கார்த்திகேயன்

அகரம் அமுதா சொன்னது…

நன்றி. கருணா அவர்களே!

பெயரில்லா சொன்னது…

எனக்கு ஒரு சந்தேகம்? என்னைக்கு முட்டையில் இருந்து யானை வந்திருக்கு...

அகரம் அமுதா சொன்னது…

வணக்கம் புனிதா அவர்களே! எனக்கும் அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. கிரிஜா மணாளன் என்ற நகைச்சுவை எழுத்தாளரின் வலையிலிருந்த அந்த நிழற்படத்தைத் திருடிவந்து அதற்கேற்றாற் போல் வெண்பா புனைந்துவிட்டேன் அவ்வளவே! தங்களின் வருகைக்கென் வாழ்த்துக்களும் நன்றிகளும்.