-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

சாதனை!

தண்ணிக்குப் பஞ்சம் தமிழ் நாட்டில் இல்லையடா!
என்றைக்கோ இந்நிலை மாறிடிச்சே! ‍-இன்றைக்கு
வீதிக்கு வீதிஒயின் ஷாப்பை அரசியற்றி
சாதிச்சிக் காட்டிடுச்சே தான்!

அகரம்.அமுதா

2 கருத்துகள்:

Sundararaj Thayalan சொன்னது…

மிகவும் நன்றாக உள்ளது உங்களின் வெண்பா. நான் சமீபத்தில் ‘’ஈகரைத் தமிழ்ச் சங்கம்’’ (ஈகரை.நெட்) நடத்திய கவிதைப்போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு பெற்றேன். தலைப்பு: இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது? அதில் கடைசியாக தமிழ் நாட்டில் சாராயச் சாக்கடை குறித்து எழுதினேன். இதோ:
சாராயச் சாக்கடைகள் சந்துபொந்தாய் ஓடுதுபார்
ஆராயத் தேவையில்லை ஐயமில்லா திக்கொடுமை
நேராக இச்சுரண்டல் நேர்கிறதே யாராலும்
சீராக்க லாகாதே சேர்ந்து
----சுந்தரராஜ் தயாளன்

அகரம் அமுதன் சொன்னது…

மிக மிக அருமையான வெண்பா! முதல் பரிசுக்குத் தகுதியான வெண்பாவும் கூட. இதுபோல் கவிதைப் போட்டிகள் நடந்தால் எனக்குத் தகவல் தரவும். நானும் கலந்துகொள்கின்றேன். நன்றிகள்