-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

புதன், 16 ஏப்ரல், 2008

கல்வி!
முதுகில்புக்ஸ் மூட்டை சுமந்துநான் போக
பொதிகழுதை கண்டு புலம்பும் -அதுக்கிருக்கும்
நல்ல குணங்கூட நாலுபேர்க் கில்லையிக்
கல்வியென் மேலெரிந்த கல்!

எழுதிகை சோர்ந்து விரல்தேய்ந்து ரேகை
அழிந்துகண் பார்வை குறைந்துப் -பழுதாகிக்
கண்ணாடி போட்டபின்னும் ஹோம்வொர்க்செய் என்கறீங்க!
என்னாங்க டீச்சர் இது!

விடிந்தால் டியூஷன்விட் டால்பள்ளிக் கூடம்
முடிந்து விளையாடப் போனா –படிங்கிற
வார்த்தையைத்தான் பாட்டிவரை வாய்நிறையக் கற்றிருக்காள்
ஆர்கிட்டச் சொல்லி அழ!

ஹோம்வொர்க்கைச் செய்து முடித்தவுடன் ஓடிப்போய்
கேம்ஆட டி.விரிமோட் கேட்டாக்கா –வீம்போட
சீரியல் பார்க்கணுண்ணு சீறுகிறாள் என்மம்மி
போரடிக்குதே வாழ்க்கை போ!

அகரம்.அமுதா

4 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

அமுதா, பிஞ்சுகள் படும் பாட்டை அழகாக வெண்பாவில் வெளிக் கொண்டு வந்திருக்கிறீகள். இதே கருத்தில் நான் எழுதிய காலத்தின் கட்டாயம் 'பதிவை' (உங்கள் வெண்பாக்களைப் படிக்கும் போது 'கவிதையை' என என்னிதைச் சொல்லவே தயக்கமாக இருக்கிறதே..) கட்டாயம் பாருங்கள்.

http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post_9078.html

ராமலக்ஷ்மி சொன்னது…

//முதுகில்புக்ஸ் மூட்டை சுமந்துநான் போக
பொதிகழுதை கண்டு புலம்பும் -//

உங்க குழந்தை இப்படிப் புலம்ப...

எனது குழந்தை...

//அஸ்ட்ரனாட் முதுகிலே
ஆக்ஸிஜன் ஸிலிண்டரோடு
அசைஞ்சு அசைஞ்சு
மிதக்கிறாப்பலே-
தள்ளாடி ஆடி நாங்க
சுமக்கின்ற பை இங்க
அஞ்சாறு கிலோ தேறுமுங்க
அதை ஏன் கேக்குறீங்க ?//

இப்படி சலித்துக் கொண்டது.

அகரம்.அமுதா சொன்னது…

வாங்க ராமலட்சுமி! வருகைக்கென் நன்றிகள். தாங்கள் அளித்துள்ள வலைக்கு அவசியம் வருகிறேன். நன்றி.

அகரம்.அமுதா சொன்னது…

கவிதை உண்மையிலேயே நல்லாயிருக்கங்க! வாழ்த்துக்கள்