-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

புதன், 16 ஏப்ரல், 2008

பம்படியில்!

நேர்பிடித்து ‘கீவில்’ நிதமுமே நிண்ணாலும்
நீர்வருமோ கார்ப்பரே ஷன்குழாயில்? -பார்த்தாக்கா
காத்துவரும்; காத்தோட சத்த(ம்)வரும் நீர்க்குமிழி
பூத்துவரும் பாத்துட்டு போ!

வாராத நீர்க்கு வரிசையிலே நிண்ணுப்பா(ள்);
தேராத வார்த்தைகளால் திட்டிப்பா(ள்); -நேராய்
அடிச்சிப்பா(ள்); மண்டை உடைச்சிப்பா(ள்); சிண்டைப்
பிடிச்சிப்பா(ள்) கொத்தாகப் பிய்த்து!

தண்ணி பிடிக்குமிடம் தண்ணி அடிக்குமிடம்
ரெண்டிலயும் சண்டைக்குப் பஞ்சமில்லே! -தண்ணி
அடிச்சாத்தான் ஆண்சண்டை போடுறான்; பொண்ணோ
பிடிக்கவே போடுறாசண் டை!

பூவடியாள் தண்ணீர்க்காய் போய்வரிசை யில்நின்று
தேவடியாள் ஆனாள் தெருக்குழாயில்! -பாவமடா!
மாதவி என்பாரே கண்ணகியை; அங்குநின்றால்
சீதைக்கும் இந்நிலைதான் சீ!

அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை: