-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

திங்கள், 28 ஏப்ரல், 2008

வேலைக்குப் போகலாம் வா!

பெற்றோர் பிரிந்து பெருஞ்செல்வம் சேர்த்திடலாம்
உற்றவளை வீட்டி(ல்)விட்டு வாதம்பி!- குற்றமில்லை
மேலைநன் நாடிருக்கு வேண்டு(ம்)பணம் சேர்த்துவர
வேலைக்குப் போகலாம் வா!

கொஞ்சமேனும் வீடுகட்டி கொண்டவளைப் பெற்றோரை
நெஞ்சு குளிர்ந்துவிடச் செய்திடலாம்- அஞ்சு
வருசம் அயல்நாட்டில் வேர்வைதனைச் சிந்தி
வருந்தி உழைத்திடலாம் வா!

தங்கைக் கலியாணம்; தாய்க்கு மருத்துவத்தோ
டஞ்சு வயதான தம்பிகற்க- தந்தையால்
உற்றகடன் தீர்க்கக் குடியிருக்கும் வீடுநிலம்
விற்றேனும் வானூர்தி ஏறு!

பிறப்பெடுத்த ஊரில்;பேர் பெற்றவுன் நாட்டில்
திறமைதனைக் காட்டல் சிறப்பா? –மறவாமல்
இட்டமுடன் மேல்நாட்டிற் கேகியே உன்திறத்தை
நட்டமென்ன காட்டிவிடு நன்கு!

அகரம். அமுதா

கருத்துகள் இல்லை: