-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

திங்கள், 19 மே, 2008

கல்லூரிப் பெண்!


1.
அங்கமெல்லாம் ஆடை அணிந்தும் மறைத்திடுவாள்
கொங்கைகளைப் பாடநூல் கொண்டு!
2.
கொங்கு தமிழிருந்தும் இங்கிலிஷை வைத்திடுவாள்
நுங்குநிகர் நாக்கின் நுனி!
3.
எண்ணையிடாள்; கூந்தல் முடிந்திடாள்; பூச்சூடாள்;
வண்ணவண்ண ஹேர்டையிடு வாள்!
4.
கைவிரல் மோதிரத்தைத் தொப்பூழ் தனிலணிந்துக்
கைவளையைக் காதணிவாள் காண்!
5.
மெய்க்குயிர்போல் ஒன்றி விடுங்காத லானாலும்
கைக்குதென்பாள் காசில்லாக் கால்!
6.
பிக்கப்பும் ஆவதொடு டேட்டிங்கும் போய்வந்து
செக்கப்பும் செய்வாள் சிலை!
7.
டிஸ்கோதே டின்பீர் இலாநாக ரீகத்தை
பிஸ்கோத்தே போல்பார்ப்பாள் பெண்!

அகரம்.அமுதா

7 கருத்துகள்:

லதானந்த் சொன்னது…

அகரம் அமுதா அவிங்களுக்கு,

ஒரு கவிஞனோட சிறப்பே அவந் தர்ர உவமையிலே இருக்கு.
நுங்கு நிகர் நாக்குன்னு ஒரு உவமை போட்ருக்கீங்க.
சூப்பரோ சூப்பர்.
ஒரு நிசம் கண்ணை மூடி ஓசனை பண்ணுனேன்.
உவமைன்ன இதுதாண்டா உவமைன்னு மனசு பொங்கிருச்சு!
ஆஹா!

நொங்கு எப்பிடி இருக்கும்?

எள நொங்கு குளுமையா இருக்கும். ஈரப் பதத்தோட இருக்கும். வளு வளுன்னு இருக்கும். லேசா ஒரு மாதிரி வாசனையாவும் இருக்கும். நாக்கால வருடினா அப்பிடியே உறிஞ்சிரலாம்னு தோணும். பாக்கறதுக்கும் அட்டகாசமாயிருக்கும். லேசா சுவைக்கிறப்போ மென்மையா சத்தமும் வரும். ருசி கிறுகிறுக்க வைக்கும். இப்படி ஐம் புலனுக்கும் கிரிகிரி தர்ர நொங்கைப் பொருத்தமா உவமையாக்கியிருக்கீங்க, தள தளன்ற குட்டியோட நாக்குக்கு.

அடடா1 அடடா! தொள தொள ஆசாமிங்களையும் சுஸ்த் ஆக்கீருவீங்க போலிருக்கே!

என்னோட பிளாக் www.lathananthpakkam.blogspot.com பாருங்க.

சந்தனத்துக்கும் பெண்ணுக்கும் சிலேடை சொல்லியிருக்கேன். படிச்சிட்டுச் சொல்லுங்க.

GIRIJAMANAALAN சொன்னது…

அன்பு அமுதா!

புதுக்கவிதையால் 'மரபுக் கவிதை' அழிகிறது என்று அழும் பழமை வாதிகளே உங்கள் இக்கவிதைகளைப் படித்தால்.........அவர்களும் 'நம்ம பக்கம்' வந்துவிடுவார்கள்! அப்படியொரு நகைச்சுவையால் வாசகர்களைக் கவர்ந்திழுக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!

- கிரிஜா மணாளன், திருச்சி, தமிழ்நாடு.

அகரம்.அமுதா சொன்னது…

வாங்க! கிரிஜா அண்ணா! தங்கள் பாராட்டுக்கென் நன்றிகள்

குமரன் (Kumaran) சொன்னது…

First one was great....

அகரம்.அமுதா சொன்னது…

குமரனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! -அகரம்.அமுதா

velumani1 சொன்னது…

அன்பு தமிங்லிஸஷ்.காம் ,

நல்லாத்தான் இருக்கு உங்க பாட்டெல்லாம்
எல்லா நாலும் கிடச்சிடுமா இப்படியே:
பொல்லாத ஆங்கிலம்தான் ஆட்டுதே உங்களை
இல்லாம இருந்தா நல்லதே.
(சரியா எழுதிட்டனா ? )

அகரம்.அமுதா சொன்னது…

வருக! வேலுமணி அவர்களே! வாழ்த்துகள் வெண்பாஎழுத முயன்றிருக்கிறீர்கள். ஆங்கில சொற்கள் இல்லாது எழுதினால் நன்றாக இருக்கும் என்று உரைத்திருக்கிறீர்கள். எனதுஅகரம் அமுதா வலையைப் படித்திருக்கிறீர்களா? ஆங்கிலச் சொற்கள்என்ன? வடச்சொற்கள் கூட கலவாமல் தூயதமிழில் எழுதி வருகிறேன். சென்று ஒருமுறை பார்வையிடுமாறுவேண்டுகிறேன். நன்றி