-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

வியாழன், 1 மே, 2008

தாயும், மகனும்!

மகன்:-
வீடியோ கேமரா வாய்ஸ்ரெக்கார்(டு) எம்.பி.த்ரி
ரேடியோ இல்லாமல் செல்போனா? -டாடியோட
பேங்க்பேலன்ஸ் தீர்ந்தாலும் தீரட்டும் காஸ்ட்லிசெல்
வாங்கினால்தான் ஃபிரண்ட்ஸ்முன் மதிப்பு!

அன்னை:-
வேர்வைசிந்தி அப்பன் வயல்காட்டில் வேலைசெய்து
கார்ப்பரேஷன் ஸ்கூலிலுன்னைக் கொண்டுபோய் -சேர்க்காமல்
கான்மெண்டில் சேர்த்துவிட்டுக் காலேஜ்க்கும் போச்சொன்னால்
ஏன்டா கொழுப்பா உனக்கு?

அகரம்.அமுதா

2 கருத்துகள்:

GIRIJAMANAALAN சொன்னது…

vaasiththEn! rasiththEn! Paaraattukkal!
- Girijamanaalan, Tiruchirappalli, Tanilnadu.

clayhorse சொன்னது…

இது நிஜந்தான். அந்தக் காலத்தில் காலேஜ் சேர்ந்ததும் மோட்டார் பைக் கேட்டு நிலைமை புரியாமல் அப்பனிடம் சண்டை போடுவார்கள். இப்போ பத்தாங்கிளாசுலேயே ஆரம்பித்து விடுகிறார்கள். போதாதற்கு நீங்கள் சொன்னது மாதிரி 'குடி மக்கள் நலம் போல முடியாட்சி காண்கின்ற கொற்றவன் '. எந்தக் காலத்தில் கவிச்சாபம்பலித்தது ?